Friday, May 10, 2019

அழகுக்கு மறுபெயர் முருகன்


அழகுக்கு மறுபெயர் முருகன்

அழகுக்கு மறுபெயர் முருகன் - அவன்
        ஆறுமுகனான குகன், மால் மருகன்

கழுகு மலைக்குகையின் வேலன் -அவன்
        கன்னித் தமிழ் மொழியில்
      மின்னல் விசைகொடுத்த
       சீலன் - உமை - பாலன்        அழகுக்கு

அந்தரங்கப் பூந்தரங்கம் மீது - அவன்
        ஆடி மொழி கூட்டிவரும் போது
வந்திருக்கும் அற்புதத்தின் ஜோதி - இங்கு
        வாழ்வுமுறை காக்கும் அவன் நீதி

நீரில் தவழ்ந்து வந்த நெருப்பு - இங்கே
        நித்தம் நமைக் காப்பதவன் பொறுப்பு
வேரில் வலிமைதரும் சிறப்பு - இங்கே
        வேலனருள் போக்கும் மீண்டும் பிறப்பு


No comments:

Post a Comment