குருவாக ஓடி வருவான்
எண்சீர் விருத்தம்
ஒருநாமம் சொல்லி அந்த ஒருதேவைப்
போற்றி
உயர்வான பக்தி திகழ
வருநாளை எல்லாம் நெஞ்சில்
திருநாளாய் எண்ணி
மனதார ஒன்றி மகிழ
ஒருநாதன், அன்னை தந்தை உருவாக ஞான
குருவாக ஓடி வருவான்
சரியான வேளை வந்து தளரரது
காத்துத்
தகவான முக்தி தருவான்
No comments:
Post a Comment