ஹயக்ரீவர் காவடிச் சிந்து
ஞானமெனும் அருள் போதம் - மிக
நல்கிடும் நாயகன் பாதம்- உயர்
நலமேதரும் ஹயக்ரீவரின் அருள்நாடிடின்
பெறுவார் நிதம்
நன்மை எனும் தன்மை
லக்ஷ்மி ஹயக்ரீவர் போற்றி - அவர்
நாமமே என்றென்றும் சாற்றி - புகழ்
இசைபாடிடும் அடியார்தினம்
வளமோடுயர் பொருள்யாவையும்
பெறுவார் நலம் உறுவார்
செல்வத் திருமகளோடு - அருள்
சேர்ப்பவரின் பதம் நாடு. - மிகத்
தெளிவானதோர் ஒளியாவையும்
அறிவாகவே உனைமேவிடச்
செய்வார் நலம் பெய்வார்
நெஞ்சில் நினைந்திடில் போதும்- ஒளி
நேராகவே உளம் மோதும் - அந்த
நிலையானவர் அருள்நாயகர்
துயரேயினி இலையேயெனச்
சொல்வார் நமை வெல்வார்
கானக் குதிரை முகத்தார் - அவர்
ஞானியர் பக்தி அகத்தார் - ஒரு
நடுநாயகம் எனவேதெரி வகையே
நமை உயர்ந்தோங்கிடப்
புரிவார் வளம் சொரிவார்
No comments:
Post a Comment