தாமதமேன் வருவதற்கு?
எண்சீர்க் கண்ணிகள்
தாமதமேன் வருவதற்கு?- மக்கள்படும் பாடு
சங்கடங்கள் போதாதா அருளள்ளிப் போடு
பூமியிலே அந்நாளில் கெட்டவர்கள்
சிலரே
பொல்லாங்கு செய்பவர்கள் இந்நாளில் பலரே
மேனியிலே ஓடுகிற இரத்தத்தின் பகுதி
வீதியிலே சிந்துதடா தீமைகள்தாம் மிகுதி
ஈனமின்று செய்பவர்கே யார்கொடுத்தார்
தகுதி?
எங்கெங்கும் எவ்விடத்தும் தீயர்களின் தொகுதி
அந்நாளில் நீசொன்ன சொல்லும்
மறந்ததுவோ
அநியாயம் அளக்குங்கோல் அய்யா மறைந்ததுவோ
பொன்னான நின்வரவு நிகழ்வதும்
எப்போது?
பூரணனே இத்தருணம் தானதற்குத் தோது..
No comments:
Post a Comment