குருவாயூர்க் கொண்டல்
பதினான்கு சீர் விருத்தம்
எண்ணமே சொல்தரும் வண்ணமே
குருவாயூர்
ஏந்தலே என் தெய்வமே!
ஈரமே அன்பதன் வாரமே பாசமே
ஈந்தருள் ஆனந்தமே
திண்ணமே போதமே சித்தமே சேர்ந்திடும்
சீரான சித்தாந்தமே
தீராத அமுதமே திகழும்வேய்ங் குழலிலே
தேனாகிடும் நாதமே
கண்ணனாய் வந்தநற் காந்தமே
ராதையின்
காதல் எழில்மோகமே
கானமே வேதமே ஞானமே கோபியர்
காட்டும் எழில்முத்தமே!
பண்ணமர் நாரா யணீயமே பாடிடும்
பாஞ்ச சன்யச் சங்கமே
பாம்பினில் ஆட்டமே அப்பனே எனையென்றும்
பாதுகாக்க வேண்டுமே!
No comments:
Post a Comment