தீம்பு கருதாத் திறல்
நாயகன்
கலிவிருத்தம்
உள்ளம் எழுமோர் உணர்வுப்
பொழிவில்
வெள்ளம் எனவே விரிகண் ணனையே
அள்ளும் தமிழில் அணிசெய்
திடவே
வள்ளல் கரிமா வதனா
சரணம்
உலகோ டுவதும், உயிரோ டுவதும்
பலகோ டிகணம் பணியோ டுவதும்
வலகோ டிடகோ இடைகோ டெனவே
அலகோ டெழுமுன் அருளோ அரியே!
கண்ணா யமுனைக் கனியே, கடலின்
வண்ணா , இனிமை வளர்வேய்ங் குழலின்
பண்ணா டுகிற பவளத் திருவாய்
மண்ணா டியதேன் மணிவாய் திறவாய்,
ஒற்றைச் சிவிகை உலகாள் வதென
அற்றைக் குடையால் அறிவித்
தவனே
பற்றை இறுகப் படிவித் தவனே
சற்றைப் பொழுதே னும்சரண்
தருவாய்
மருந்தா னவனே மலர் நாயகனே
திருந்தா னிவனென் னுளமெண்
ணுவதோ
வருந்தா வகையே மனமே புகுவாய்.
பிருந்தா வனமாய்ப் பெரிதாய்
வருவாய்.
தணியட் டுமெனச் சமயத் தினிலே
மணிகட் டிவரும் வடிவே அருள்வாய்
பணியட் டுமெனப் பரிசை ஒளியாய்
பிணிபட் டவரின் பிணிவிட்
டிடவே!
மேய்க்கும் தொழிலின் விவரம்
அறிவாய்
தாய்க்கும் பெரிதாய்த் தயைகள்
புரிவாய்
ஏய்க்கும் எமைமேய்த் தலுனக்
கரிதோ
காய்க்குள் கனியைக் கனிவிப்
பவனே!
பாம்புத் தலையில் பரத நடமோ
தாம்புக் கயிறுன் இடைபொன்
வடமோ
வீம்புக் கெனநான் விலகிச்
செலினும்
தீம்பு கருதாய் திறல் நாயகனே!
மணமே வரினும் வளமே வரினும்
பணமே வரினும், பதவி வரினும்
கணமே னுமனம் கலையா திருக்கும்
குணமே தருவாய் குளிர்மா
மணியே!
நீலக் கடலுன் நிறமாய் மகிழும்
கோலப் புவியுன் கடைவாய்
அமுதம்
காலக் கடலில் கரையும் அடியேன்
மூலக் கனலே எதனை மொழிவேன்?
கீதைச் சுடரைக் கிளர்வித்
தவனே
பாதைப் பயணம் படிவித் தவனே
மாதைத் துயரின் மடிமீட்
டவனே
தாதை எனநான் சதிரா டுவதோ?
விழியாய் ஒளியாய் விதியாய்
நிதியாய்
மொழியாய், மொழியின் முதலாய், கவியாய்
வழியாய், வகையாய், வரமாய் வளமாய்
எழிலாய்த் திருவாய் இறைவா
வருவாய்!
No comments:
Post a Comment