Saturday, May 11, 2019

ஆயர்பாடி வீதியிலே


ஆயர் பாடி வீதியிலே
சிந்து

ஆயர் பாடி வீதியிலே ஆடி வருபவன் - கண்ணன
அற்புதமாய் வேய்ங்குழலில் பாடல் தருபவன்
ஆடி வருபவன் - கண்ணன்
பாடல் தருபவன்

தீய ராக வந்த பேரைத் தேய்த்துக் கொன்றவன் - கண்ணன்
தேடித் தேடி வெண்ணை தன்னைத் திருடிக் தின்றவன்
தேய்த்துக் கொன்றவன் - கண்ணன்
திருடித் தின்றவன்

ஆளை யெங்கே என்னு முன்னே ஓடி மறைபவன் - கண்ணன்
அங்கு மிங்கும் எங்குமாகக் கூடி நிறைபவன்
ஓடி மறைபவன் - கண்ணன்
கூடி நிறைபவன்

நீலமேக வானம் போன்ற வண்ணம் கொண்டவன் - கண்ணன்
நிலத்தில் வீழ்த்து வாய்புதைத்து மண்ணை உண்டவன்
வண்ணம் கொண்டவன் - கண்ணன்
மண்ணை உண்டவன்

கட்டுவிர லால் மலையைக் குடைபிடித்தவன் - கண்ணன்
சூழ்ந்துவரும் பகையையெலாம் பொடிபொடித்தவன்
குடை பிடித்தவன் - கண்ணன்
பொடி பொடித்தவன்

கட்டிவைத்த உரலைக் கொண்டு மரங்கள் சாய்த்தவன் - கண்ணன்
காட்டினிலே தோழரோடு பசுக்கள் மேய்த்தவன்
மரங்கள் சாய்த்தவன் - கண்ணன்
பசுக்கள் மேய்த்தவன்

தேவகிக்கு நன்மகனாய்ச் சிறையில் பூத்தவன் - கண்ணன்
திரௌபதிக்கு சேலைதந்து முறையில் காத்தவன்
சிறையில் பூத்தவன் - கண்ணன்
முறையில் காத்தவன்

குட்டி வாயில் அண்டம் காட்டி விந்தை செய்தவன் - கண்ணன்
கோபியர்கள் தலையில் உள்ள பூவைக் கொய்தவன்
விந்தை செய்தவன் - கண்ணன்
பூவைக் கொய்தவன்

கௌரவர்கள் நகரம் நோக்கித் தூது நடந்தவன் - கண்ணன்
காலம் வெளி கோலம் எனும் யாதும் கடந்தவன்
துhது நடந்தவன் - கண்ணன்
யாதும் கடந்தவன்

பாண்டவர்கள் வென்றிடவே பாதை காட்டினான் - கண்ணன்
பார்த்தன் கவலை உற்ற போது கீதை ஊட்டினான்
பாதை காட்டினான் - கண்ணன்
கீதை ஊட்டினான்
 

No comments:

Post a Comment