ஆடி வருகவே
பதினான்கு சீர் விருத்தம்
கங்கை என்னும் ஆறு கொண்ட
காந்த னாடி வருகவே
காளை தன்னில் ஏறு கின்ற
கைலை நாதன் வருகவே!
மங்கை தன்னைப் பாகம் கொண்ட
மாண்பு நாதன் வருகவே
மாளு மென்னும் ஏது வின்றி
வாழுந் தேவன் வருகவே
அங்கி தன்னை ஏந்து கின்ற
ஆன்ம போதன் வருகவே
ஆடும் நன்மைப் பாம்ப ணிந்த
ஆடல் நாதன் வருகவே
எங்க ளண்ணல் ஈடில் தந்தை
ஏந்த லாடி வருகவே
ஏறு தன்னில் ஏறி அன்பின்
ஈசன் ஆடி வருகவே!
No comments:
Post a Comment