சக்களத்திச் சண்டை
பதினான்கு சீர் விருத்தம்
இடப்பாகத் திருக்கின்ற மடமானை
மோகித்தே
இறைவனும் மனம் மகிழ்ந்தே
என்னென்னவோ பேசி இன்புற்றி ருக்கையில்
எட்டியே ஒருத்தி பார்த்தாள்
தடுப்பாரே இல்லாமல் மிடுக்காக
ஓடிய
தண்ணீரின் கதாநாயகி
தலையிடம் இறைவனின் சடையினில் இடம்கொண்டே
தருக்காக இருக்கின்றவள்
துடுக்காக ஓர்துளி எடுத்திடப்
பாகத்துத்
சுந்தரி மேல் தெளித்தாள்
'தூயவன் இடம்தந்தான் என்பதில் கர்வமோ
சொல்'லெனக் கங்கை கேட்டாள்
'சடைக்குள்ளே பொதிந்துனைத்
தலையிடம் வைத்ததால்
தருக்கினை போலும்' என்றே
சக்தியும் சொல்லிடச் சண்டையைத் தான்கண்டு
சங்கரன் மனமகிழ்ந்தான்.
No comments:
Post a Comment