காந்திமதி
பல்லவி
நெல்லையில் அருள்புரியும்
காந்திமதி - அம்மா
நின்னடி துதிக்கின்றோம்
நீயன்றி ஏதுகதி?
அனுபல்லவி
இல்லையென்னும் சொல்லை இல்லையெனச்
செய்வாய்
இயலிசை நாடகமும் என்னுள்ளே
நீ பெய்வாய் - நெல்லையில்
சரணம்
வல்லமை யாவையும் நின்னருள்
வரமன்றோ?
வழங்கிட நீகணிப்பாய் பக்தியின்
தரமன்றோ?
எல்லையில்லா வெளியில் எங்கும்
நிறைபவளே
ஏழை மனப் பேழையிலே என்றும்
உறைபவளே! - நெல்லையில்
No comments:
Post a Comment