Saturday, May 11, 2019

எண்ணத்தில் தீபம் ஏற்றுங்கள்


எண்ணத்தில் தீபம் ஏற்றுங்கள்- ஜோதி


எண்ணத்தில் தீபம் ஏற்றுங்கள்- ஜோதி
    ஏற்றிடும் ஐயனைப் போற்றுங்கள்  - எண்ணத்தில்

கண்ணுக்குள் பார்வை அவன் ஜோதி- இந்தக்
  காசினியில் ஓங்கும் அவன் நீதி
பண்ணுக்குள் ராகம் அவன் மோனம்அவன்
  பார்வையில் கிட்டும் பெரும் ஞானம்.       - எண்ணத்தில்

அபயம் அளிப்பது அவன் கரமேநலம்
    யாவும் கொடுக்கும் அவன் கரமே
சபரி கிரிமுடி அவன் வீடு- அவன்
    தங்குவதோ அன்பர் மனக்கூடு  - எண்ணத்தில்

காட்டில் ஒலிப்பது அவன் கீதம்- நெஞ்சம்
    காட்டும் சரணம் எனும் நாதம்
ஊற்றுப் பெருக்காய் உறவாகும்பக்தி
   உள்ளம் உருக்கும் நிறைவாகும்       -  எண்ணத்தில்



No comments:

Post a Comment