மகர விளக்கு
அங்கொரு தீபம் எரிகிறது - அது
யாருக்காக எரிகிறது
தங்கிடும் கடவுள் சான்றாய் அன்றோ
தரணியில் ஓங்கி எரிகிறது-உயர்
சத்தியம் அங்கே விரிகிறது.
அண்டக் குழிவை அகலாய்ச் சுருக்கி
அதனுள் உண்மைச் சாறு பிழிந்து
கொண்டல் பஞ்சைத் திரியாய்ச் சமைத்து
கூறும் மறையால் கொளுத்தும் தீபம் - அங்கொரு
மகர வாசல் படியின் மீது
வலது பாதம் வைக்கும் போது
சிகரம் மீதில் ஜோதி தெரியும்
தெய்வ உண்மை அதனால் புரியும்
அந்த விளக்கு மகர விளக்கு
அதுதான் உலகின் சிகர விளக்கு
முந்தும் ஜோதி யாவும் ஒன்றாய்
முழுமை யாவும் திகழும் விளக்கு!
No comments:
Post a Comment