கமலம்வாழ் கலைத்தெய்வமே
பல்லவி
கமலம்வாழ் கலைத்தெய்வமே – உனைக்
களிகூர்ந்து நலம்பெறவே சேவித்து
நின்றேனே
அனுபல்லவி
அமளிகள் நிறைமனத்தில் அமைதியைத்
தருவாயே
அனுதினம் உனைநினை மனநிலை
அருள்வாயே
சரணம்
அறிவினைத் தெளியவை, அகத்திலே ஒளியைவை
அரியவை தெரியவை அருஞ்செயல் புரியவை
அரியவை தெரியவை அருஞ்செயல் புரியவை
குறிப்புகள் அறியவை குணநலம்
நிறையவை
கொள்கையில் பிடிப்புவை,
கொண்டதை முடித்துவை
நல்லதை நிறைத்துவை அல்லதை
மறைத்துவை
நடப்பதைச் சிறக்கவை ஞானத்தை உறைக்கவை
நடப்பதைச் சிறக்கவை ஞானத்தை உறைக்கவை
செல்வத்தை வெல்லவை, நல்லசொல் சொல்லவை
தினந்தினம் வளர்ந்திடும் புதுமைகள் சொல்லிவை
No comments:
Post a Comment