தாயளிக்கும் யாவும்
தரம்
நேரிசை வெண்பா
என்சிந்தை
உன்பெயரை என்றும் சுமந்திருக்கும்
என்சொற்கள் உன்னால்தான் என்றைக்கும் மின்னலிடும்
என்றைக்கும் கன்றுநான், ஈதறிவாய், நாமகளே
கன்றெனக்கு ஊட்டல் கடன்.
என்சொற்கள் உன்னால்தான் என்றைக்கும் மின்னலிடும்
என்றைக்கும் கன்றுநான், ஈதறிவாய், நாமகளே
கன்றெனக்கு ஊட்டல் கடன்.
அன்றுநான்
கேட்டேன் அளித்தாய், கலைவாணி
நன்றுநான் பெற்றவற்றை நல்குகிறேன் – என்றைக்கும்
நீயளிப்பாய், நான்தருவேன், நில்லாத் தொடரிதுதான்
தாயளிக்கும் யாவும் தரம்.
நன்றுநான் பெற்றவற்றை நல்குகிறேன் – என்றைக்கும்
நீயளிப்பாய், நான்தருவேன், நில்லாத் தொடரிதுதான்
தாயளிக்கும் யாவும் தரம்.
No comments:
Post a Comment