Sunday, May 12, 2019

வாராகி திருத்தசாங்கம்


வாராகி திருத்தசாங்கம்.
காப்பு

வாராகி அம்மை வளர்திருத்த சாங்கமிது
சீராய் அமைந்து சிறந்திடவே- நேராக
நின்னருளை நல்கிடுக நேசக் கணபதியே
கன்னல்பா வுக்குநீ காப்பு.

நூல்

1 பெயர்
பச்சைப் பசுங்கிளியே, பார்த்துப் பழந்தின்னும்
மெச்சுபுகழ்ப்
 புள்ளழகே, வீரமுடன்- இச்சகத்தை
எச்சரிக்கை
 யாய்க்காக்கும் எம்தேவி பேரென்ன?
உச்சரிப்பாய்
 வாராகி யே!
2 நாடு
வட்டமாய் ஆரம் வனைந்த கழுத்துடையாய்
மட்டில்லா
 நம்முடைய வாராகி  இட்டமுடன்
வாழுகிற
 நாடெதுவோ, வாயுரைப்பாய் பைங்கிளியே,
சூழுமிவ்
 வண்டமெனச் சொல்.
3
 ஊர்-
பூங்காவில்
 வாழும் புதுக்கிளியே, எம்மன்னை
பாங்காய்
 அமரும் பதியெதுவோ?- நீங்காத
பத்தி
 மனங்கொள்ளும் பக்தர்கள் உள்ளங்கள்
சக்திவா
 ராகியின் ஊர்


4 நதி
மரகதப் பச்சையாம் வண்ணமெழில் கொண்ட
தரமுடைய
 கிள்ளாய்நீ சாற்று  வரமருளும்
வாகான
 வாராகி  மாண்பு  நதியெதுவோ
ஆகாச
  கங்கை  அறி
5 மலை
அஞ்சுகமே, பேசும் அழகே,எம் வாராகி
விஞ்சும்
 மலையை விளம்புகநீ- நெஞ்சம்
கலையாத
 வெற்றியே கையகத் தாக்கும்
மலையாத
 வீர மலை.
6
 தேர்
செம்மை
 அலகுடைய தேன்மொழியே, வாராகி
அம்மை
 ரதமெதுசொல் ஆய்ந்தேநீ -  வெம்மைமிகு
போர்க்களத்
 தேபகைவர் புன்மனத்தில் அச்சத்தைச்
சேர்க்கும்
 கிரிசக்ரத் தேர்.
7 வாகனம்
பேசும்பொற் சித்திரமே  பீடு  மிகுந்திருக்கும்
ஆசைப்
 பசுங்கிளியே, அம்மையும்  நேசமாய்
ஏறுகின்ற
 வாகனம் ஏதுரைப்பாய்- மேதியெனக்
கூறும்
  எருமையெனக் கொள்.
8 படை
கிஞ்சுகமே, கொஞ்சுகிற கிள்ளையே, மாற்றாரை
அஞ்சவைக்கும்
  அன்னை  படையெதுவோ- விஞ்சிக்
கலக்குகிற
  வாராகி  கைப்படையே  நீண்ட
உலக்கைப்
  படையென்  றுரை.
9
 தார்
பஞ்சுச்
 சிறகினிலே பச்சை இழைகிளியே
விஞ்சைமிகும்
 வாராகி  தாருரைப்பாய்  மஞ்சள்
இழைத்த
 பசுவண்ணம் ஏறிவறி  மாறு
தழைக்கும்
 எழில்மஞ்சள்  தார்
10 கொடி
அன்னைநம்  வாராகி  யாதுகொடி  வைத்துள்ளாள்
சின்னஞ்
 சிறுகிளியே  செப்புவாய்  என்றைக்கும்
ஆசிதரும்
 ஏற்றமுள  அம்மை  திருத்தேரின்
வாசியாம்
  வெற்றிக்  கொடி.

நூற்பயன்

இந்தத் திருத்தசாங்  கத்தை  மனம்கொண்டு
வந்தித்துப்
 போற்றி  வணங்கிடுவோர்- சந்ததமும்
அன்னை
  அருளால்  அகமகிழ  வாழ்ந்திடுவார்
உன்னதமாய்
 வாழ்வார்  உயர்ந்து.


No comments:

Post a Comment