Tuesday, May 14, 2019

அறத்தின் நாயகன்


அறத்தின் நாயகன்
அறத்தின் நாயகன் அருமறை காத்தவன்
மறத்தில் நன்னெறி வாய்த்திடச் செய்தவன்
குறக்கு கந்தனைக் தம்பியாய்க் கொண்டவன்
ஒறுத்தல் செய்யினும் அறத்தில் நிற்பவன்

சொல்லொன்றால், அன்பிற் கொண்ட
            துணையொன்றால், மனத்தின் ஏகும்
வில்லொன்றால், அறத்தில் சேர்ந்த
            வினையொன்றால், நிறமாய் வாய்த்த
அல்லொன்றால், அல்லல் ஏற்ற
            அருளொன்றால், காலில் பட்ட
கல்லொன்றால் பெருமை சேர்த்த
            காகுத்தன் கழல்கள் வாழ்க!

தாதுகும் மலர்ச்சோலை மாநகர் தன்னை நீங்கியே தன்னரும்
தாதை சொல்லெனும் மந்திரம் பிணி தன்மையால் வனம் சென்றவன்
வேதம் ஓதிடும் மூல மந்திரம் மெய்ப்பொருள் தவ வித்தகன்
சீதை நாயகன் ராமசாமியின் செய்ய பாதமே போற்றியே!

No comments:

Post a Comment