Tuesday, May 14, 2019

முருகன் காவடிச் சிந்து


முருகன் காவடிச் சிந்து

காளி இளஞ்சக்தி கன்றவன் -அருள்
காட்டிடும் மூலமாய் நின்றவன் - உயர்
கான மாமயில் ஏறியே உல கேழும் ஏழும் நலம்பெற வலம்
சென்றவன் நமை வென்றவன்

சூரனை வென்று  தொலைத்தவன்- என்றும்
தூயவர் நெஞ்சில் நிலைத்தவன் -உயர்
நாரணன்திரு மால்மருகனாய் நாடும் அன்பரை வாழவைத்திடும்
நலத்தவன் செந்தில் தலத்தவன்


வள்ளியை ஈர்த்தவன் வேடன் - அந்த
வள்ளல்நம் செந்தமிழ் நாடன் -உயர்
வெள்ளியங்கிரி துள்ளுமால்விடை வள்ளலும்மறை கொள்ளவாயினன்
சீடன் செங் கோடன்

சுப்பிர மணியன் தீரன் - எழில்
தோயும் இசையின் ரீங்காரன் - சொல
ஒப்பிலாவகை  செப்புமாமொழி எப்புறத்திலும் முற்படச்செயும்
வீரன் எழில் மாரன்


No comments:

Post a Comment