Friday, May 10, 2019

இலந்தைவாழ் எங்கள் இறைவா


இலந்தைவாழ் எங்கள் இறைவா

கீர்த்தனை

  பல்லவி

இலந்தைவாழ் எங்கள் இறைவா- உனை
எண்ணத்தில் எந்நாளும் ஏற்றித் தொழுவோமே-   இலந்தைவாழ்
   
அனுபல்லவி

குலதெய்வ மாயெங்கள் நலந்தழைக்க வந்தவனே
பலமுறவே வளம்பெருக நிதமுமருள் தருபவனே  - இலந்தைவாழ்

சரணம்

உன்பதமே எங்களுக்குத் தந்தருளும் உன்னதம்
உன்விழியின் பார்வைதரும் உய்ர்ந்த பல சன்னதம்
என்றென்றும் எங்கள்மனம் பணியும் உன் பொற்பதம்
தென்னிலந்தை நாயகனே உன்னெழிலே அற்புதம்

எங்கிருந்த போதினிலும் எங்களுக்கு நீகதி
எங்கள்செயல் யாவையுமே நீபோடும் ஓர்விதி
மங்கலங்கள் தந்தருள நீதானே அதிபதி
மன்னவனே தந்தருள்வாய் எம்வாழ்வில் நிம்மதி-  இலந்தைவாழ்

No comments:

Post a Comment