என்கணவன்
கலிவெண்பா
வள்ளி
முருகனைப் பற்றிச் சொல்வதாக அமைந்த பாடல். 35 ஆண்டுகட்கு கி.வா.ஜ.
தலைமையில் படிக்கப்பட்டது. அன்று பலராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது .
கி.வா ஜ , கற்பனை மிகச் சிறப்பு என்று பாராட்டினார்.
கி.வா ஜ , கற்பனை மிகச் சிறப்பு என்று பாராட்டினார்.
விண்பார்த்து
நிற்கும் மிகப் பெரிய குன்றத்தில்
மண்பூத்து நிற்கும் வளம்சார்ந்த சிற்றூரில்
கொட்டும் அருவி குமரன் புகழ்பாட
நெட்டை மரங்கள் நெருங்கிக் கிசுகிசுக்க
பச்சை கரைந்து பளபளத்துக் குன்றத்தின்
உச்சி வரைநிறைந்து ஊடாட, தங்கத்தைச்
சுட்டுக் கதிர்முனையில் தூவிவிட்ட காட்சியதாய்
எட்டப் பரந்தே எழில்கொள் தினைப்புனத்தில்
வட்டமிட்டு வட்டமிட்டு வண்ணப் பறவையெல்லாம்
கொட்டி முழக்கி இசை கோலா கலம்போட
மானை வலம்வந்து மாதா எனவணங்கி
தேனைத் தினை மாவில் சேர்த்துக் கலந்துண்டு
கானக் குறவர் களியாட, வேடர் குலச்
சேனைத் தலைக்கொண்டு சிங்கம் எனவாண்ட
நம்பியரசன் மலையில் நாராயணன் மருகன்
எம்பிரான் பேர்பாடி ஏத்தும் திருநாளில்
குன்றமென வந்த குமரன் விழிமலராய்
ஒன்றும் குழிக்குள் ஒருமான் மகளாக
வந்து பிறந்தவள்நான் வள்ளி எனும் பெயராள்.
நீடு மலைக்குன்றில் நீதி அரசாளும்
வேடர் குலநம்பி வேண்டி வளர்த்தமகள்
செந்தமிழ்த் தேவன் திருத்தணிகை மாமுருகன்
செந்தில் பதித் தெய்வம், தேவர் படைத்தலைவன்
கந்தன் கதிர்காமன் கார்த்திகே யன்வேலன்
காதல் இளம்குமரன் கைப்பிடித்த நாயகிநான்
வேதப் பொருளை விண்ணோர்க்கு நாயகனை
யாதும் கடந்ததொரு அற்புதத்தை, என்றனரும்
நாதனைப் பற்றியிங்கு நான் பாடப் போகின்றேன்
அன்றொருநாள் விண்ணாட்டின் ஆய்ந்தமலர்ச் சோலையிலே
நின்றிருந்தேன் ஏதோ நினைவாக, அந்நேரம்
மின்னலொன்று வந்து விளையாடிச் சென்றதுகாண்
என்னை மறந்தேன், இருப்பிடத்தைத் தான்மறந்தேன்
என்னுள்ளே ஏதேதோ இன்ப உணர்வலைகள்
ஒன்றி, உருவாகி, ஓங்கி, பலவாகிப்
பொங்கி, புரண்டு, புரட்சி பலசெய்து
எங்கேயெங் கேயென்றே ஏறிட்டுப்பார்க்கும்வகை
கண்ணை நிமிர்த்திக் கறங்கிடவே வைத்தனவால்
விண்ணை விளக்குகிற விந்தையினை யான்கண்டேன்
ஆடும்பிரான் மைந்தன் அம்பலவன் பாலனவன்
வாடும் அடியவர்க்கு வாழ்வளிக்க வந்தமகன்
நின்றிருந்தான், என்றனது நெஞ்சத்தைத் தின்றிருந்தான்
கொன்றிடும் பார்வைக் குமரன் எனைப் பார்த்து
“சுந்தர வல்லி சுடரெழிலைக் கொண்டவளே
வந்தருள் செய்வேன், மணம் கொள்வேன், நீயுமொரு
மானின் வயிற்றில் மகவாய்ப் பிறக்க’’வென்றான்
மானின் வயிறுதித்தேன். மன்னன் மகளானேன்
சின்னஞ் சிறுவயதில் சேவல் கொடிதாங்கும்
மன்னன் சிலை நோக்கி மல்லிகைப்பூப் போடுகையில்
புன்முறுவல் செய்து புளகிக்க வைத்திடுவான்,
என்வயதிற் கேற்ப இவனும் வளர்ந்திடுவான்
என்நினைவில் என்கனவில், இன்பத்தீ ஏற்றிடுவான்.
என்னைத் தனக்கொப்ப இங்கிதங்கள் செய்திடுவான்
ஈராறு அகவையிலே ஈராறு கையான்மேல்
தீராத காதல் செழிப்பிலே நான் மிதந்தேன்
காதல் கதிர்வளர்ந்து காட்ட, புனத்தினிலே
மோதும் தினையில் பால் மொய்த்ததுகாண், வேதப்
பரன்மேலே காதல் பயிலும் எனையும்
பரண்மேலே காதல் பயிலவே வைத்துவிட்டார்
என்றன் மனப்பறவை எங்கோ பறந்திருக்க
தின்ன வரும்பறவைச் சேர்க்கை தனைவிரட்ட
ஏலோலோ பாடும் இனிமைக் குரலெடுத்து
ஆலோலம் பாடி அவற்றை விரட்டிவந்தேன்
ஆகம் நிறைந்த என்றன் அன்பரது கூட்டமெனத்
தோகை மயிலுக்கும் சூழ் கொண்டைச் சேவற்கும்
தானியத்தைத் தின்னத் தடையே விதிக்கவில்லை
கானங்கள் பாடிக் கதிரை வளர்த்துவந்தோம்
அன்றொருநாள் நாங்களெலாம் ஆலோலம் பாடுகையில்
மின்னுகிற வேலெடுத்து வேடர் குலத்தொருவன்
எங்கிருந்தோ வந்தான், எனைக்கொஞ்சம் பாரென்றான்
இங்குனக்கு நானென்றே ஏதேதோ பாடிவிட்டான்
“ஆலோலம் பாடுகிற வள்ளியே- என்னை
அடிமைப்படுத்திவிட்ட கள்ளியே-உன்னை
யாரடி தினைப்புனத்தே அல்லலுற வைத்துவிட்டார்
சொல்லுவாய் எனை வெல்லுவாய்
”உன்றன் அழகில்மிகச் சொக்கியே- நானும்
உண்ணும் உணவுகூட விக்கியே- இங்கே
ஓடிவந்த என்னை நோக்கி உன்றன்கனி வாய்திறந்து
பேசுவாய் அன்றி ஏசுவாய்”
எங்கோநான் கேட்டகுரல், எங்கோநான் பார்த்த முகம்
பொங்கும் உணர்வெல்லாம் புல்லரிப்பு, ஏதோ
புதியவனாய்த் தோன்றிவிட்ட போதினிலும் , முன்னர்
விதிப்பயனாய் வந்த விவரம் புரிந்து கொண்டேன்
என்பதிக்கு வந்துவிட்ட என்பதியை நானறிந்தேன்
மன்னன் விளையாட்டு மாயத்தில் பங்கேற்றேன்
வேங்கை மரமனான், வேலன் கிழமானான்
ஆங்கோர் சுனைக்கரையில் ஆனையை வாவென்றான்
இந்தத் தருணத்திற்கு ஏங்கி இருந்தவள்நான்
கந்தனைக் கையாலே கட்டிப் பிடித்துவிட்டேன்.
அந்தக் கணத்தில் அவனின் துணையானேன்
சிந்தை மகிழ்ந்தேன்,என் தெய்வத்துள் நான்நிறைந்தேன்.
என்னை இழந்தேன்பின் எல்லாம் அவனானேன்
என்னில் புதியபலம் ஏதோ வரக்கண்டேன்
காதல் முறையில் களவாடிச் சென்றுவிட்டான்
மோதவந்த என்குலத்தை முற்றும் அழித்துவிட்டான்
“உன்வரத்தால் நீயே உறவை எழுப்பு” என்றான்
என்தந்தை என்தாயர் எல்லோரும் தானெழுந்தார்
முன்நின்ற தெய்வம் முருகன் என உணர்ந்தார்
தன்னை மறந்த என் தந்தை பதம் பணிந்தார்
ஊருக்க ழைத்துவந்தார் உற்ற முறையினிலே
சீருடனே எங்கள் திருமணத்தை செய்வித்தார்
தேனிலவுக் கென்னைத் திருத்தணிகைக் குன்றுக்கே
தானழைத்தான், சென்றோம், தளிர்ப்பச்சை பூசுமெழில்
குன்றத்தில் அன்போடு கூடிக் களித்திருந்தோம்.
என்முன்னே ஓர்முகமாய் வந்தே இதழ்சுவைப்பான்
ஆனால் உடனே அறுமுகனாய் மாறிடுவான்
“தேனே, குறவள்ளி, தீந்தமிழே, நல்லமுதே
ஆறுமுகங்களதன் ஆசையை நீ தீரென்பான்”
ஆறிரண்டு கைகளினால் அள்ளி அணைத்திடுவான்
அந்தி மயங்கும் அழகுத் திருப்போதில்
கந்தனும் நானும் களித்திருப்போம், அந்நேரம்
யாரோ அடியார் அபயக் குரல் கொடுப்பார்
பாரான் எனையும் அவன் பாய்ந்துதவச் சென்றிடுவான்
இன்னொருநாள் குன்றத்தில் ஏகாந்த மாயிருந்தோம்
“கன்னல் சுவையென்றும் காதல் அமுதென்றும்
இன்னிசைத் தேனென்றும், இன்பக் கனியென்றும்
என்னென்னவோ சொல் இவன் சொன்னான், அந்நேரம்
செந்தமிழ்ப் பாடல் செவியில் விழுந்ததுவால்
அந்தி மறந்தான், அருகில் எனை மறந்தான்
கன்னலெனச் சொன்னதெலாம் காற்றில் பறக்கவிட்டான்
தன்னை மறந்தான், தமிழ்ச் சுவையில் தான் திளைத்தான்
“நக்கீரன் பாடுகிறான், நற்றமிழைக் கேட்டிலையோ
இக்கவியின் தேன்சுவைக்கும் ஈடுண்டோ?” என்றுரைத்தான்
இன்னொருநாள் நாங்கள் இனிய மலர்க்காவில்
தென்றல் நுகர்ந்திருந்தோம், சேவற்கொடியோன்பால்
ஊடல் மிகக்கொண் டொதுங்கியே நானிருந்தேன்
பாடினான் , ஆடினான், பாசாங்குகள் செய்து
காலில் விழுந்தான், கனிமொழியே வாவென்றான்
வேலாலே சூரனை வென்றேன்நான் நீயுன்கண்
வேலாலே என்னையும் வென்றுவிட்டாய் என்றுரைத்தான்
சால மகிழ்ந்து தழுவிநான் நிற்கையிலே
தள்ளிவிட்டான், உத்தரியம் தான்விடுத்தான், பக்கத்தே
வள்ளி எனை மறந்தான், வண்ண மயில் துறந்தான்
ஓடினான், போரென்றும் உற்றதுபோல் தான்விரைந்தான்
சாடினான் , வேலிகளைத் தாண்டினான், பின்மறைந்தான்
சாதனைகள் ஏதேதோ சாதித்துவிட்டான்போல்
வேதனையைப் போக்கிடவே மீண்டும் திரும்பி வந்தான்
கோபுரத்தில் ஏறிக் குழந்தை விழுந்துவிட்டான்
ஆபத்தி னின்றும் அவனைநான் காத்துவிட்டேன்
செந்தமிழில் என்புகழைச் சேர்த்துக் குழைத்திடுவான்
சந்தத்தில் இன்கவிதைச் சாதனைகள் செய்வான்
அருண கிரியென்றே யாவரும் போற்றப்
பெருமைகள் பெற்றிடுவான், பின்னர் நமைச்சேர்வான்”
என்றுரைத்தான், இப்படி என்னை மறந்தவனும்
சென்றுவிட்ட நேரங்கள் செப்பி முடிந்திடுமோ?
ஊமைகள் பேசுதற்கும் உற்றவலி தீர்ப்பதற்கும்
நாமத்தைச் சொல்பவரை நற்கதியில் உய்ப்பதற்கும்
தெய்வயானை நாயகிபால் சென்று திரும்புதற்கும்
தெய்வக் கவியரங்கில் தீந்தமிழைக் கேட்பதற்கும்
சென்றது போகப்பின் சிக்குகிற நேரத்தில்
என்னோ டிருப்பான், எனதுகதை இவ்வளவே!
என் அழகால் என் உறவால் ஏற்கும் உரிமையதால்
என்கணவன் தன்னை இழுக்கின்ற காந்தத்தைச்
செந்தமிழ்க் காந்தம் சிதறிவிடச் செய்வதனால்
செந்தமிழ் பாடிடவே தேர்ந்த சபைவந்தேன்
என்கவியை என் தமிழை என் தலைவன் கேட்டிடுவான்
என்றனுக்கு நல்விருந்து எங்கோன் படைத்திடுவான்
சொல்லால் தமிழ்மாலை சூட்டும் கவிஞர்களே
எல்லோரும் வாழ்க இனிது!

No comments:
Post a Comment