வாராகி
அனுக்கிரக ஸ்தவம்
( மொழியாக்கம் –
இலந்தை சு இராமசாமி)
1 நீநிற
அல்லி நிறத்தவ, நிறைந்த முகுட பயங்கரி
ஆன உலக்கை கலப்பையை ஆயுத மாகத் தரித்தவ,
மேனிலை பக்தர்க் கருள்பவ, மெலியிடை, நீல விழியினாய்
ஏன வதனி, கனதன எழிலினாய், போற்றிஓம் போற்றியே!
ஆன உலக்கை கலப்பையை ஆயுத மாகத் தரித்தவ,
மேனிலை பக்தர்க் கருள்பவ, மெலியிடை, நீல விழியினாய்
ஏன வதனி, கனதன எழிலினாய், போற்றிஓம் போற்றியே!
2 அடியவர் துன்பம் பயநிலை அகமுறும் தீய பிசாசுகள்
வடிவறு முண்டம் பிணமென யாவும் தகர்த்தே ஒழிப்பவ,
தடையறு செல்வம் அருள்பவ, சமரில் பகையினை வெல்பவ
நடமிடும் அண்டம் இயக்கிடும் நாயகி போற்றிஓம் போற்றியே!
வடிவறு முண்டம் பிணமென யாவும் தகர்த்தே ஒழிப்பவ,
தடையறு செல்வம் அருள்பவ, சமரில் பகையினை வெல்பவ
நடமிடும் அண்டம் இயக்கிடும் நாயகி போற்றிஓம் போற்றியே!
3 தனது நி யில் அமர்ந்துநீ சார்ந்தவர்
தம்மைப் புரக்கிறாய்
கனமனத் தாக்கம், அஞ்சுதல், பரபரப் புள்ள பிணிநிலை
நினதருள் நீக்கிப் புரந்திட நின்னடி யார்முன் பகைவரைக்
கனலாய் எரித்துத் தகர்க்கிறாய், கருணையே போற்றிஓம்- போற்றியே
கனமனத் தாக்கம், அஞ்சுதல், பரபரப் புள்ள பிணிநிலை
நினதருள் நீக்கிப் புரந்திட நின்னடி யார்முன் பகைவரைக்
கனலாய் எரித்துத் தகர்க்கிறாய், கருணையே போற்றிஓம்- போற்றியே
4 சமர்விளை யாட்டா பந்தடித் தாடிடும் ஒன்றா என்னவே
அமர்விளை யாடும் அம்மையே அணியுலக் கையால் வேகமாய்
இமைத்திடும் முன்னர் வீழ்த்தியே ஏர்கலப் பையால் உழுகிறாய்
அமைவிரை தன்மை என்சொல? அம்மையே போற்றிஓம் போற்றியே
5 அன்னாய் நிலைக்கும் இடத்தினாய் அருமென் கரத்தின்
விசையினால்
முன்னும், வலமும் இடமும்பின் எங்கணும் சுற்றி அடிப்பதை
பின்னரும் சற்றே தளர்த்தியே பிழையுணர் கின்ற பகைவரை
இன்னரும் அன்பால் புரந்திடும் அம்மையே , போற்றிஓம்
போற்றியே!
6 தன்னிடம் நின்று சமர்செயும்
தரியலர் தம்மைத் தகர்க்கிறாய்
முன்னர் உதிரம் குடிக்கிறாய் மதுவுண் டுயிரை அளிக்கிறாய்
முன்புரள் நீண்ட முடியினாய் சண்டமுண் டா முன் னிருக்கிறார்
அன்னை பலியை விரும்புவாய் உன்பதம் போற்றிஓம் போற்றியே!
முன்னர் உதிரம் குடிக்கிறாய் மதுவுண் டுயிரை அளிக்கிறாய்
முன்புரள் நீண்ட முடியினாய் சண்டமுண் டா முன் னிருக்கிறார்
அன்னை பலியை விரும்புவாய் உன்பதம் போற்றிஓம் போற்றியே!
No comments:
Post a Comment