Sunday, May 12, 2019

வாராகி ஐம்பாகி-பகுபங்கி


 வாராகி ஐம்பாகி-பகுபங்கி
 கட்டளைக் கலித்துறை
அன்னையே வாராகி ஆதி  முதலே அருள்கின்றவள்
தன்னையே தாராளம் நீதி விதியே தருகவென்றேன்
உன்னினேன் ஏராளம் ஓதி இதயம் உருகிநின்றேன்
என்னுளே சீராகும் போதம் பதிந்தே இருந்திடவே
இது கட்டளைக் கலித்துறைப் பாடல்
அன்னையே
வாராகி
ஆதி
முதலே
அருள்கின்றவள்
தன்னையே
தாராளம்
நீதி
விதியே
தருகவென்றேன்
உன்னினேன்
ஏராளம்
ஓதி
இதயம்
உருகுகின்றேன்
என்னுளே
சீராகும்
போதம்
பதிந்தே
இருந்திடவே


கட்டளைக்கலித்துறை ஐந்தாகப் பிரிகிறது. இதன் தமிழ்ப்பெயர் ஐங்கிளை
 சீர் விருத்தம்
 அன்னையே
தன்னையே
உன்னினேன்
என்னுளே                       1
  சீர் விருத்தம்
வாராகி
தாராளம்
ஏராளம்
சீராகும்
 சீர்விருத்தம்
ஆதி
நீதி
ஓதி
போதம்
 சீர்விருத்தம்
முதலே
விதியே
இதயம்
பதிந்தே
 சீர்விருத்தம்
அருள்கின்றவள்
தருகவென்றேன்
உருகுகின்றேன்
இருந்திடவே
இவைதவிர துணைக்கிளைகள்
வஞ்சித் துறை
அன்னையே வாராகி
தன்னையே தாராளம்
உன்னினேன் ஏராளம்
என்னுளே சீராகும்
வஞ்சி விருத்தம்
 அன்னையே வாராகி அருள்கின்றவள்
தன்னையே தாராளம் தருகவென்றேன்
உன்னினேன் ஏராளம் உருகுகின்றேன்
என்னுளே சீராகும் இருந்திடவே

கலிவிருத்தம்
அன்னையே  வாராகி ஆதி தருகின்றவள்
தன்னையே தாராளம் நீதி தருகவென்றேன்
உன்னினேன் ஏராளம் ஓதி உருகுகின்றேன்
என்னுளே சீராகும் போதம் இருந்திடவே
 வஞ்சித்துறை
அன்னையே தருகின்றவள்
தன்னையே தருகவென்றேன்
உன்னினேன் உருகுகின்றென்
என்னுளே இருந்திடவே
கலிவிருத்தம்
அன்னையே வாராகி  முதலே அருள்கின்றவள்
தன்னையே தாராளம் விதியே தருகவென்றேன்
உன்னினேன் ஏராளம் இதயம் உருகிநின்றேன்
என்னுளே சீராகும் பதிந்தே இருந்திடவே
 கலிவிருத்தம்
வாராகி ஆதி  முதலே அருள்கின்றவள்
தாராளம் நீதி விதியே தருகவென்றேன்
ஏராளம் ஓதி இதயம் உருகிநின்றேன்
சீராகும் போதம் பதிந்தே இருந்திடவே



No comments:

Post a Comment