ஐயப்பன்
பதினான்கு சீர் விருத்தம்
மோகத்தின் சூழ்ச்சியால்
முகிழ்த்தனைநீ ஆயினும்
மோகத்தை வென்று விட்டாய்
மோகித்துனை நாடும் பக்தர்தம் நெஞ்சிலே
மோனமாய் நின்றுவிட்டாய்
தாகத்தைத் தீர்த்திடும்
தண்ணீராய் நீமனத்
தாபத்தைத் தீர்த்துவைப்பாய்
சபரிகிரி மீதிலே உனைநாடும் பக்தர்கள்
‘ சாமியே சரணமென்பார்
மேகத்திலே மலை ஆகத்திலே
உளம்
மீறிடும் பக்தி யோடே
மேலேறி வந்திடும் பக்தர்தம் வாழ்விலே
விந்தைகள் செய்து காப்பாய்
தேகத்திலே குறை இன்றியே
சிந்தையில்
தெய்வமே நீயிருக்கச்
செய்யப்பனே அருள் பெய்யப்பனே எமை
ஆண்டிடும் அய்யப்பனே!
No comments:
Post a Comment