ஐயப்பன் கும்மி
கும்மியடி பெண்ணே கும்மியடி -மிகக்
கோலாகலமாகக் கும்மியடி
நம்பிக்கை கொண்டு சரணமென்றே ஐயன்
நாமத்தைச் சொல்லியே கும்மியடி
நீலகண்டன் இளம் மைந்தனடி-சுழல்
நேமி வலங்கொண்டான் செல்வனடி
ஞாலம் புறந்திட வந்தவன்டி-ஊமை
நாவில் அசைவினைத் தந்தவன்டி
கொல்லும் புலியினை வென்றவனாம்-மேலே
கோலா கலமாகச் சென்றவனாம்
பொல்லா மகிஷியை மாய்த்தவனாம்-வீட்டும்
புன்மைகள் யாவையும் தேய்த்தவனாம்
காட்டில் மிருகங்கள் அஞ்சுமடி-ஐயன்
கமல மலர்ப் பதம் தஞ்சமடி
நாட்டம் செலுத்திடும் நெஞ்சமடி- ஐயன்
நாமத்தை வேறெது விஞ்சுமடி
சபரிகிரி முடி சார்ந்தவண்டி -உளச்
சத்தியத்தில் நிலை சேர்ந்தவன்டி
அபய மளித்திடும் ஐயனடி-நாடி
அன்பர் தொழுதிடும் மெய்யனடி(கும்மியடி)
No comments:
Post a Comment