அபிராமி பஞ்சகம்
பொங்கும் அருளே புதுமின்
விரைவே
எங்கும் நலமே இசைவிப் பவளே
துங்கம் உயரத் தொழுதேன்
பதமே
தங்கும் அபிரா மிநலம் தருக!
இம்மா புவனம் இயக்கம் புரிவாய்
எம்மால் இயல்வ தினிவே றில்லை
சும்மா இருத்தல் அழகோ இறைவீ
அம்மா அபிரா மிநலம் தருக!
வாடும் அடியார் வருத்தம்
விலகத்
தோடு நிலவாய்ச் சுடரப் புரிந்தாய்
ஈடு சொலவே இயலா உமையே
கூடும் அபிரா மிநலம் தருக!
சொல்லே பொருளே சுடரே ஒளியே
கல்லும் கனியக் கனிவிப்
பவளே
புல்லும் பிணிகள் விலகப்
புரிவாய்
வல்லாய் அபிரா மிநலம் தருக!
உனையன் றியொரு கதிவே றிலையே
நினையே சரணம் எனவந் தடைந்தேன்
இனிவே றெதுவும் இயம்பல்
எதற்கு?
கனிவே அபிராமி நலம் தருக!
No comments:
Post a Comment