Friday, May 10, 2019

ஆதி பராசக்தி அன்னை கருமாரி


ஆதி பராசக்தி அன்னை கருமாரி

பல்லவி

ஆதி பராசக்தி அன்னை கருமாரி
அவள் பதம் பணிந்தார்க்கு அருள்தருவாள் வாரி  (ஆதி)    


அனுபல்லவி

யாதும் அவள் வரமே அளிப்பதவள் கரமே
அன்னை அடிமலரில் அடியேன் அடைக்கலமே     (ஆதி) 

சரணம்

அம்மையின் ஆணையில் அயனும் எழுதுகிறான்
அரனும் அரியும் அவளன்பில் இயங்குகிறார்
நம்புதல் நம்பாமை யாதும் அவள் வரமே
நல்லதும் அல்லதும் அவளின் திருவருளே!         (ஆதி)

முன்னெது,பின்னது காலம் அவள் நடமே
மூவுலகெங்கணும் யாவும் அவள் இடமே
இன்னதை இப்படிக் காத்தல் அவள் உரிமை
எடுத்தவள் கொடுப்பதைப் பெறுவது நம்பெருமை    (ஆதி

No comments:

Post a Comment