Friday, May 10, 2019

பிணிதீர் பஞ்சகம்


பிணிதீர் பஞ்சகம்

கலிவிருத்தம்

அருளா னவளே  அரிதா னவளே
பொருளா னவளே, புகழானவளே
பெரிதா னவளே பிணிதீர்த் தருள்வாய்
கருமா ரியுன தடியே சரணம்!

கருதா மனமும் கனிவிப்பவளே
ஒருதா யெனவே உலகம் புரப்போய்
விரியா விதமே பிணிதீர்த் தருள்வாய்
கருமா ரியுன தடியே சரணம்!

உருளும் உலகம் உனைக்கேட்டுருளும்
தருக நலமே தருக எனவே
உருகித் தொழுவேன் திடமே  தருவாய்
கருமா ரியுன தடியே சரணம்!

 திருமால் இளையோய், மழைநா யகியே
பெருகும் அருளின் பிழம்பா னவளே
வருநாள்  வளநாள் எனவே புரிவாய்
கரு மா ரியுன தடியே சரணம்

அரவின் உருவில் அருள்செய் பவளே
இருவே றுருவாய் எழிலார்ந் தவளே
விரைவாய் எனது பிணிதீர்த் தருள்வாய்
கருமா ரியுன தடியே சரணம்.!

9-2-2010

No comments:

Post a Comment