ஆயிமகமாயி
சிந்து
ஆயி மகமாயி அவள்
ஆயிரம் கண்ணுடையா
ஆங்காரப் பேய்களையும் அவள் அதட்டி ஒடுக்கிடுவா

நோயிலே பாயலிலே நாம் நொந்து
கிடக்கையிலே
தாயென வந்திடுவா மாரியம்மா தாளாத் துயர் தொலைப்பா

கற்பனைக் காரியவ, மாரியம்மா, கற்பூர நாயகியாள்
காலம் நடத்துறவள் மாரியம்மா காட்சி கொடுக்கிறவள்
அற்புத மாகிறவள் மாரியம்மா யாவும் படைக்கிறவள்
ஆனந்தக் கூத்திடுவா மாரியம்மா ஆனந்தக் கூத்திடுவா

No comments:
Post a Comment