வாராகி இரட்டைமணிச்
சிந்து
காப்பு
வாராகி இரட்டை மணிச்சிந்து
வாகாக நானும் பாடிடவே
காரானை வேழ முகத்தவனே
வாகாக நானும் பாடிடவே
காரானை வேழ முகத்தவனே
காப்பா ய் நீயும் அமைவாயே
நூல்
நூல்
இருசீரிரட்டை சமநிலைச் சிந்து
அன்பு மனத்தவளே – வாராகி
ஆளும் இனத்தவளே
இன்பம் எலாந்தருவாய் – வாராகி
என்றனைக் காத்திடுவாய். 1
அன்பு மனத்தவளே – வாராகி
ஆளும் இனத்தவளே
இன்பம் எலாந்தருவாய் – வாராகி
என்றனைக் காத்திடுவாய். 1
ஆனந்தக்
களிப்பு
காக்கும் கருணைவா ராகி –
அம்மா
கைமேல் பலன்தரும் அன்புப் ரவாகி
வாக்கில் உயிர்கொடு தாயே – நீ
வள்ளல் அறிவேன் வரமருள் வாயே! 2
கைமேல் பலன்தரும் அன்புப் ரவாகி
வாக்கில் உயிர்கொடு தாயே – நீ
வள்ளல் அறிவேன் வரமருள் வாயே! 2
முச்சீரிரட்டை
சமநிலைச் சிந்து
வாயால் உனைப்பாட வேண்டும் –
குரல்
வாகாக நீதரல் வேண்டும்
தாயாய்ப் பரிந்திட வேண்டும் – பெருஞ்
சாதனை நான்செய வேண்டும் 3
ஆனந்தக் களிப்பு
வாகாக நீதரல் வேண்டும்
தாயாய்ப் பரிந்திட வேண்டும் – பெருஞ்
சாதனை நான்செய வேண்டும் 3
ஆனந்தக் களிப்பு
வேண்டும்வேண் டும்வேண் டும்
அம்மா – பெரும்
வெற்றிமேல் வெற்றிமேல் வெற்றியே வேண்டும்
யாண்டும் உன தரு ளாலே – பெரும்
ஆக்கங்கள் காணுவேன் நானும் மேன்மேலே! 4
வெற்றிமேல் வெற்றிமேல் வெற்றியே வேண்டும்
யாண்டும் உன தரு ளாலே – பெரும்
ஆக்கங்கள் காணுவேன் நானும் மேன்மேலே! 4
நாற்சீரிரட்டை சமநிலைச்
சிந்து
மேலே நிலைத்திட வேண்டிய
சிந்தை – இன்றோ
வீணாய் அலைகிற பொய்மனக் கந்தை
ஆலாய்ப் பறந்தே அடிக்கிறோம் பந்தை- இந்த
ஆட்ட த்தில் எத்தனை எத்தனை நிந்தை 5
வீணாய் அலைகிற பொய்மனக் கந்தை
ஆலாய்ப் பறந்தே அடிக்கிறோம் பந்தை- இந்த
ஆட்ட த்தில் எத்தனை எத்தனை நிந்தை 5
ஆனந்தக் களிப்பு
நிந்தைகள் பட்டது போதும்
- எந்த
நேரத்தும் நீக்கிடு பொய்மையும் சூதும்
சிந்தையை நீ தெளிவாக்கு - என்னுள்
சேர்த்திடு தெய்வத நன்னெறி நோக்கு 6
நேரத்தும் நீக்கிடு பொய்மையும் சூதும்
சிந்தையை நீ தெளிவாக்கு - என்னுள்
சேர்த்திடு தெய்வத நன்னெறி நோக்கு 6
ஐஞ்சீரிரட்டை சமநிலைச் சிந்து
நோக்கம் சுயநல மின்றிப் பொதுநலம் பேணிடவும் – ஏதும்
நொம்பலம் இன்றியே என்றனின் கொள்கைகள் ஊன்றிடவும்
வாக்கு கொடுத்திடு வாராகி தேவியே மாமணியே – தினம்
வாழ்ந்திடும் வாழ்க்கை அர்த்தம் உளதென்று மாண்புறவே!7
நோக்கம் சுயநல மின்றிப் பொதுநலம் பேணிடவும் – ஏதும்
நொம்பலம் இன்றியே என்றனின் கொள்கைகள் ஊன்றிடவும்
வாக்கு கொடுத்திடு வாராகி தேவியே மாமணியே – தினம்
வாழ்ந்திடும் வாழ்க்கை அர்த்தம் உளதென்று மாண்புறவே!7
ஆனந்தக் களிப்பு
மாண்பில் உயர்ந்திடும் தேவி –
நீதான்
வாழ்க்கைக் கடிகாரம் ஓடிடச் சாவி
நாண்தானே வில்லுக்கு உத்தி – அந்த
நாணெனத் தந்திடென் சொல்லுக்குச் சக்தி 8
வாழ்க்கைக் கடிகாரம் ஓடிடச் சாவி
நாண்தானே வில்லுக்கு உத்தி – அந்த
நாணெனத் தந்திடென் சொல்லுக்குச் சக்தி 8
எழுசீரிரட்டை சமநிலைச்
சிந்து
சக்தி மிகுந்திடும் சக்தியே ஸ்ரீபுரம் சார்ந்து வதிந்திடும் தேவியே – பெரும்
தண்டனை ஈபவள் ஆகினும் பத்தரைத் தாங்கிப் புரந்திடும் நாயகி
சக்தி மிகுந்திடும் சக்தியே ஸ்ரீபுரம் சார்ந்து வதிந்திடும் தேவியே – பெரும்
தண்டனை ஈபவள் ஆகினும் பத்தரைத் தாங்கிப் புரந்திடும் நாயகி
யுக்தி மிகுந்திட யுத்த களத்திலே ஓங்கி அடிக்கும்
தளபதி – உனை
உள்ளத் திருத்திப் பணிகிறோம் உன்பதம் இன்றி இலையெமக் கோர்கதி! 9
உள்ளத் திருத்திப் பணிகிறோம் உன்பதம் இன்றி இலையெமக் கோர்கதி! 9
ஆனந்தக் களிப்பு
ஓர்கதி யாகிடும் தாயே –
என்றும்
உன்னை நினைக்கும் நெறியருள் வாயே
தேர்ந்தனை என்றனை நீயே – என்ன
செய்வதற் கென்றுன்றன் வாய்திறப் பாயே! 10
உன்னை நினைக்கும் நெறியருள் வாயே
தேர்ந்தனை என்றனை நீயே – என்ன
செய்வதற் கென்றுன்றன் வாய்திறப் பாயே! 10
அறுசீரிரட்டை சமநிலைச்
சிந்து
திறந்தால் கதவை வெளிச்சம் தேடி
அகத்தில் நுழையும் – அதுபோல்
திறந்த மனத்தால் தொழுதால் இறைவி மனமும் மகிழும்
அறிந்து சிரத்தை யுடனே அவளைத் தொழுகிற போது – தேவி
அருளைத் தருவாள் பொருளைத் தருவாள் இதுவோ தப்பாது11
திறந்த மனத்தால் தொழுதால் இறைவி மனமும் மகிழும்
அறிந்து சிரத்தை யுடனே அவளைத் தொழுகிற போது – தேவி
அருளைத் தருவாள் பொருளைத் தருவாள் இதுவோ தப்பாது11
ஆனந்தக் களிப்பு
தப்பா சரியாவென் றேதும் –
நானும்
தன்னால் அறியாமல் ஏதுசெய் போதும்
அப்போ பிழைகரு தாது – நீயும்
அன்பாய்ப் பரிவுகொள் தாயே என்மீது 12
தன்னால் அறியாமல் ஏதுசெய் போதும்
அப்போ பிழைகரு தாது – நீயும்
அன்பாய்ப் பரிவுகொள் தாயே என்மீது 12
ஐஞ்சீரிரட்டை சமநிலைச் சிந்து
என்மீது கோபம் கொள்ள
எத்தனையோ உண்டு -எனில்
என்தமிழ் மீது மிக்க ஆர்வத்தைக் கொண்டு
உன்னையே பாடவைத்தே என்பழி தீர்ப்பாய் – இதுபோல்
ஊருலகி லுண்டோ சொல்? செய்தனைநல் வார்ப்பாய் 13
என்தமிழ் மீது மிக்க ஆர்வத்தைக் கொண்டு
உன்னையே பாடவைத்தே என்பழி தீர்ப்பாய் – இதுபோல்
ஊருலகி லுண்டோ சொல்? செய்தனைநல் வார்ப்பாய் 13
ஆனந்தக்
களிப்பு
வார்த்தாளி வாராகி தேவி – தேக
வன்மைதா நீயுமுன் கையாலே நீவி
பார்த்தாலே போதுமப்போது – பண்டைப்
பாவமும் நீங்குமுன் பார்வைக் கொப்பேது? 14
வன்மைதா நீயுமுன் கையாலே நீவி
பார்த்தாலே போதுமப்போது – பண்டைப்
பாவமும் நீங்குமுன் பார்வைக் கொப்பேது? 14
நாற்சீரிரட்டை
சமநிலைச் சிந்து
ஏதுள்ள தென்றென்றும் எண்ணி
யெண்ணியே- காலம்
ஏகம் கழிகிறது வாதம் பண்ணியே
யாதுள்ள தென்றெண்ண யாதவசியம் ?- அம்மா
ஆக்கம் பெறத்தருவாள் நல்ல வசியம் 15
ஏகம் கழிகிறது வாதம் பண்ணியே
யாதுள்ள தென்றெண்ண யாதவசியம் ?- அம்மா
ஆக்கம் பெறத்தருவாள் நல்ல வசியம் 15
ஆனந்தக்
களிப்பு
நல்ல வசியமே தேவை – உன்றன்
நல்லருளால் நீ இயக்கிடென் நாவை
சொல்லைக் கடந்ததோர் சோதி – உன்றன்
சொற்கள் தானே எங்கள் வாழ்க்கைக்கு நீதி 16
நல்லருளால் நீ இயக்கிடென் நாவை
சொல்லைக் கடந்ததோர் சோதி – உன்றன்
சொற்கள் தானே எங்கள் வாழ்க்கைக்கு நீதி 16
முச்சீரிரட்டை
சமநிலைச் சிந்து
நீதி அளிக்கின்ற வன்மை – நல்ல
நேசம் கொடுக்கின்ற தன்மை
யாதும் வரமாகும் நன்மை – அவள்
ஆங்காரி ஆயினும் மென்மை. 17
நேசம் கொடுக்கின்ற தன்மை
யாதும் வரமாகும் நன்மை – அவள்
ஆங்காரி ஆயினும் மென்மை. 17
ஆனந்தக் களிப்பு
மையமாய் உன்றனைச் சுற்றி – அன்று
வானவர் போரிட்டார் கிட்டிற்ரு வெற்றி
வையகம் வாழவைப் பாயே – உன்றன்
வாழ்த்தால் அமைதி நிலவட்டும் தாயே! 18
வானவர் போரிட்டார் கிட்டிற்ரு வெற்றி
வையகம் வாழவைப் பாயே – உன்றன்
வாழ்த்தால் அமைதி நிலவட்டும் தாயே! 18
இருசீரிரட்டை
சமநிலைச் சிந்து
தாயே வராகமுகி – லலிதை
சைனியச் சேனாபதி
நாயேன் பிழைபொறுத்தே – எனக்கு
நல்குவாய் நல்லகதி 19
சைனியச் சேனாபதி
நாயேன் பிழைபொறுத்தே – எனக்கு
நல்குவாய் நல்லகதி 19
ஆனந்தக்
களிப்பு
நல்ல கதியென்றால் முக்தி –
அந்த
ஞானத்தை நோக்கி நீ தந்திடு சித்தி
வல்லமை வேண்டும்நற் தெம்பு- அம்மா
மாறாமல் வேண்டும் நினதருள் அன்பு. 20
ஞானத்தை நோக்கி நீ தந்திடு சித்தி
வல்லமை வேண்டும்நற் தெம்பு- அம்மா
மாறாமல் வேண்டும் நினதருள் அன்பு. 20
நூற்பயன்
வாராகி இரட்டை
மணிமாலைச் சிந்து
பாராயணம் செய்யக் காப்பளருள் தந்து
வாராத நலமெல்லாம் தாம்வந்து சேரும்
தீராத நோயெல்லாம் குணமாகித் தீரும்
பாராயணம் செய்யக் காப்பளருள் தந்து
வாராத நலமெல்லாம் தாம்வந்து சேரும்
தீராத நோயெல்லாம் குணமாகித் தீரும்
No comments:
Post a Comment