வாராகி
உலக்கை விருத்தம்
போராடி
வந்திடும் தீராப் பகைவரைப்
போட்டுப் புரட்டி வீழ்த்தும்
பொல்லாங்கு செய்தவர் புல்லாகப் போயிடப்
பூமிக்குள் தள்ளி ஆழ்த்தும்
சாராத நெஞ்சினர் யாரா யிருந்தாலும்
தள்ளிப் புடைபுடைக்கும்
சண்டைக் களத்தினில் கண்ட இடத்தெலாம்
தாக்கி நடுநடுக்கும்
சேராத மேலுமி நேராக வேறாகத்
தீட்டிப் புடைப்பதென்ன
சிந்தைக்குள் வந்துள கந்தைகள் யாவையும்
சீக்கிரம் வேறாக்கிடும்
வாராப் பகைவரைச் சீறி வழிகண்டு
வாரிக் களத்தடிக்கும்
வாராகி கைகளில் நேராய்ப் பிடித்துள
வஜ்ஜிர வல்லுலக்கை
போட்டுப் புரட்டி வீழ்த்தும்
பொல்லாங்கு செய்தவர் புல்லாகப் போயிடப்
பூமிக்குள் தள்ளி ஆழ்த்தும்
சாராத நெஞ்சினர் யாரா யிருந்தாலும்
தள்ளிப் புடைபுடைக்கும்
சண்டைக் களத்தினில் கண்ட இடத்தெலாம்
தாக்கி நடுநடுக்கும்
சேராத மேலுமி நேராக வேறாகத்
தீட்டிப் புடைப்பதென்ன
சிந்தைக்குள் வந்துள கந்தைகள் யாவையும்
சீக்கிரம் வேறாக்கிடும்
வாராப் பகைவரைச் சீறி வழிகண்டு
வாரிக் களத்தடிக்கும்
வாராகி கைகளில் நேராய்ப் பிடித்துள
வஜ்ஜிர வல்லுலக்கை
தண்டநா தாகையில் தண்டம் கொடுத்திடத்
தண்டுகொண் டேயிருக்கும்
சக்கரம் போலவே அக்கரை இக்கரை
தானாய்ச் சுழல் விரிக்கும்
அண்டிப் பணிவோரின் சிண்டினில் அன்னையின்
ஆசியைக் கொண்டு சேர்க்கும்
ஆகாத பேர்களை வேகாத வெய்யிலில்
ஆடவிட்டே யுருக்கும்
அண்டங்கள் யாவிலும் செண்டு புடைத்திடும்
அட்டகா சம்புரியும்
ஆகாசம் பாதாளம் வாகாகச் சென்றிடும்
அச்சம் விளைத்திருக்கும்
மண்டலம் எங்கிலும் கண்டனம் என்னவே
மக்களைச் சொல்ல வைக்கும்
வாராகி கைகளில் நேராய்ப் பிடித்துள
வஜ்ஜிர வல்லுலக்கை.
தண்டுகொண் டேயிருக்கும்
சக்கரம் போலவே அக்கரை இக்கரை
தானாய்ச் சுழல் விரிக்கும்
அண்டிப் பணிவோரின் சிண்டினில் அன்னையின்
ஆசியைக் கொண்டு சேர்க்கும்
ஆகாத பேர்களை வேகாத வெய்யிலில்
ஆடவிட்டே யுருக்கும்
அண்டங்கள் யாவிலும் செண்டு புடைத்திடும்
அட்டகா சம்புரியும்
ஆகாசம் பாதாளம் வாகாகச் சென்றிடும்
அச்சம் விளைத்திருக்கும்
மண்டலம் எங்கிலும் கண்டனம் என்னவே
மக்களைச் சொல்ல வைக்கும்
வாராகி கைகளில் நேராய்ப் பிடித்துள
வஜ்ஜிர வல்லுலக்கை.
No comments:
Post a Comment