Sunday, May 12, 2019

வாராகி மகிட விருத்தம்


 வாராகி மகிட விருத்தம்

தன்முதுகில் வாராகி அமர்ந்துள்ளாள் என்றே

           தருக்கிமிகப் பெருமிதமாய்ச் சுற்ரிவரும் நன்றே
அன்னையவள் ஆணையொன்றே அதுவேற்றுச் செல்லும்
       அதன்வழியில் எதிர்ப்பட்ட பகைவர்கலைக் கொல்லும்
மின்னுகிற கொம்பிரண்டும் குத்தீட்டி ஆகும்
       வெஞ்சமரில் எதிர்ப்பட்ட அவுணர்குழு சாகும்
முன்புவர பகை போகும்
, தத்தகிட தகிடம்
       மூர்க்கமுள வாகனமே வாராகி மகிடம்

வேகமுடன் வீசிவரும் மகிடத்தின் வாலாம்
       வீச்சொன்றில் வீழுபவர் ஆயிரத்தின் மேலாம்
கூகைகழு கெல்லாமே அதன்பக்கம் சுத்தும்
       கொல்லுகிற பேர்சடலம் அவைவிரும்பிக் கொத்தும்
ஆகம்நிறை அன்பர்கட்கு  ஆசிகளை நல்கும்
       அதனாலே நல்வளங்கள் தாமாக மல்கும்
வாகையின்றி வேறெதுவும் அறியாத மகிடம்
       வாராகி ஏறிவரும் மகிடமதே மகிடம்
வாராகி மகிடவாகனம், உலக்கை ஆயுதம்

No comments:

Post a Comment