Sunday, May 12, 2019

வாராகி குங்குமம்


வாராகி குங்குமம்
குங்குமமாம் குங்குமம்
       குளுமையான குங்குமம்
எங்களம்மை வாராகி
       ஏற்றமிகு குங்குமம்
நெற்றியிலே வைத்திட
       நிம்மதியைத் தந்திடும்
வெற்றியினை நாளெலாம்
       வேட்கையுடன் தந்திடும்

மஞ்சளிலே செய்வதால்
       மங்கலங்கள் நல்கிடும்
விஞ்சுமெழில் குங்குமம்
       மேலான குங்குமம்
 வகிட்டினிலே வைத்திட
       மரணபயம் போக்கிடும்
சுகங்கொடுக்கும் குங்குமம்
       துயர்கெடுக்கும் குங்குமம்
 புருவமத்தி வைத்திட
       பொசுக்கும் தீய சக்தியை
அருள்கொடுக்கும் குங்குமம்
       அருமையான குங்குமம்
 பத்திரமாய்க் காத்திடும்
       பரிவுமிக்க குங்குமம்
வைத்திருக்கும் குங்குமம்
       வாழவைக்கும் குங்குமம்
      

குங்குமமாம் குங்குமம்
       குளுமையான குங்குமம்
எங்களம்மை வாராகி
       ஏற்றமிகு குங்குமம்

No comments:

Post a Comment