Friday, May 10, 2019

வீரபத்ரர் ஆறடிப் பஞ்சகம்


ஸ்ரீவீரபத்ரர் ஆறடிப் பஞ்சகம்
சிவனின் சடையில் தெறித்தே உதித்தாய்
உவமைக் கரிய உருவம் எடுத்தாய்
எவரும் உனையே எதிர்கொண் டிடவே இயலாத் திறலனே!
புவனம் நடுங்கப் புரளும் கடல்கள்
சிவணும் சினமும் தினவு கொடுக்கக்
கவலை அமரர் முனிவர் அடையக் கதித்த பெரியனே!

பெரிய மகஞ்செய் பிரஜா பதியும்
அரிய சிவனை அழைக்க மறுத்தார்
உரிய பெருமை உதவாத் தகப்பன் பிழையைத் தெரிவித் தே
திருத்த முனைந்தே சினத்தைச் சுமந்து
ஒருத்தி உமையும் உடனே விரைய
பொருத்தம் கழிசொல் புகன்றான் தகப்பன் எரிச்சல் மிகுந்ததே!

சினத்தில் விழுந்தாள் எரியில்
திகுதி குவெனச் சிவனும் சினந்தான்
தகத கவெனெத் தழலும் புரளச் சரியாய் ஒருபாடம்
புகட்ட நினைத்துப் புரளும் சடையை
வகுத்தே கரத்தால் வலித்தே இழுத்து
மிகுந்த விரைவாய்த் தரையில் விடுக்க வடிவம் எடுத்தாயே!

எடுமெ டுமெடு மெடுமென் றெழுந்தே
தடத டதட தடவென் றெதிர்ந்தே
தொடுத்துப் புடைத்து வெடித்துச் சிதைத்துத் துதைத்து விரைந்தாயே!
உடைத்துப் பொடித்து தகர்த்து நொறுக்கி
உடல்கள் சரித்து தலைகள் நெரித்துச்
சுடலை எனவே மகத்தை முடித்துத் துவம்சம் புரிந்தாயே
புரிந்த பொருவில் விரிந்த செயல்கள்
எரிந்த உடல்கள் சரிந்த குடல்கள்
பெரிது மிருந்தும் பிழைகள் பொறுத்தே திருப்பி உயிர்த்தாயே
பரிவும் கனிவும் மறத்தில் அறத்தின்
அருமை திகழ
 அமைந்த இறைவா
கருணை மிகவே எமக்கும் அருள்க!கடவுள் சிவன்நீயே!

No comments:

Post a Comment