நலம்தா பஞ்சகம்
யாருக்கும் அஞ்சேனென் றார்த்தெழுந்த தட்சனையே
வேரறுத்த எங்களருள் வித்தகனே,,,,வீரபத்ரா
முட்டிவலி நீங்கி முறையாக நான்நடக்க
அட்டியின்றி நீயே அருள்,
நேரத்தி லேவந்து நின்தாள் பணிந்துவிட்டேன்
பாரம் குறைக்கும் பராபரமே-,வீரபத்ரா
முட்டிவலி நீங்கி முறையாக நான்நடக்க
அட்டியின்றி நிpயே அருள் ,
கூரிய ஈட்டியினால் குத்தியது போல்வலியால்
சாரம் இழந்து தவிக்கின்றேன்,,,,,வீரபத்ரா
முட்டிவலி நீங்கி முறையாக நான்நடக்க
அட்டியின்றி நீயே அருள்
மாரதனே. மங்காத மாமணியே. தென்னிலந்தை
சேருகின்ற எங்கள்குலத் தெய்வதமே,,,,வீரபத்ரா
முட்டிவலி நீங்கி முறையாக நான்நடக்க
அட்டியின்றி நீயே அருள்,
ஊருக்(கு) எடுத்துரைப்பேன் உற்றவர்க்கெல் லாமுரைப்பேன்
பாருக் குரைப்பேன்உன் பண்பருளை,,,,வீரபத்ரா
நையாது நானும் நலமாய் நடப்பதற்கு
ஐயா உனைவிட்டால் யார்?
=================
No comments:
Post a Comment