வாராகி சம்வாதம்
வினா:
எங்க ளுக்குக் குறைகள் பலவும் உண்டே அம்மையே – இதுபோல்
ஏதும் உனக்கும் உண்டோ
அன்னாய்,
எடுத்துச் சொல்கவே
வாராகி விடை:
பிறக்கும் போதே பெரிய ளாகப் பிறந்து விட்டேனே- அரும்
பிள்ளை விளை
யாட்டி லாமல் இருந்து விட்டேனே
வினா:
பார்க்க நல்ல பொலிவாய்ப் பலரும் இருக்கும் போதிலே-
நீயும்
பன்றி முகம் ஏனெ டுத்தாய் சொல்க அம்மையே!
பன்றி முகம் ஏனெ டுத்தாய் சொல்க அம்மையே!
வா.வி:
தோன்று தீமை ஆழ மாக ஊன்றி விட்டதால் – அதைத்
தோண்டி வீசத் தேவை இந்தப் பன்றித் தோற்றமே
தோண்டி வீசத் தேவை இந்தப் பன்றித் தோற்றமே
வினா:
குடல்கிழிப்பாய் மது குடிப்பாய், என்று
சொல்கிறார் – கேட்டால்
குலைநடுக்கம் ஆகுதம்மே என்ன சொல்கிறாய்”
குலைநடுக்கம் ஆகுதம்மே என்ன சொல்கிறாய்”
வா.வி:
அதனைக் கேட்டு நீயும் ஏண்டா கவலை கொள்கிறாய் – நான்
ஆளுக் கேற்பச் செயலெடுப்பேன் அறிந்து கொள்ளடா
வாளை ஏந்தி வருபவர்முன் வாளெடுக்கிறேன் – மாறாய்
வாழைப்பழம் தருபவர்முன் தணிந்து போகிறேன்
ஆளுக் கேற்பச் செயலெடுப்பேன் அறிந்து கொள்ளடா
வாளை ஏந்தி வருபவர்முன் வாளெடுக்கிறேன் – மாறாய்
வாழைப்பழம் தருபவர்முன் தணிந்து போகிறேன்
வினா:
இறக்கும் பொழுதில் உன்னை
நினைக்கும் எண்ணம் வருதற்கே – அம்மா
எனக்கு நீயும் அந்தச் சமயம் உதவி செய்வையா?
எனக்கு நீயும் அந்தச் சமயம் உதவி செய்வையா?
வா.வி:
இந்தக் கணமே அந்தக் கணமாய்
எண்ணிப் பழகிக்கொள் – ஆம்
அந்தக் கணத்தில்
நினைத்த படியே எல்லாம் நடக்குமே!
வினா :
என்றனிடத்தில் நீயு மெதிர்
பார்ப்ப தென்னேயோ- அதை
எடுத்துச் சொன்னால் அந்தப் படி இருக்கப் பார்க்கிறேன்
எடுத்துச் சொன்னால் அந்தப் படி இருக்கப் பார்க்கிறேன்
வா.வி:
உனக்குக் கொடுத்த பணியை
நீயும் ஒழுங்காய்ச் செய்யடா- சமயம்
உனக்குக் கிடைக்கும்
போதில் என்னை நினைவில் வையடா
No comments:
Post a Comment