ஒரே ஒரு வெற்றி
குயிலென்று கொஞ்சியதைப்
பாடச் சொன்னேன்
குயிலுக்குள் காகத்தின் குரலைக் கேட்டேன்
மயிலென்று நானழைத்தே
ஆடச் சொன்னேன்
வான்கோழி நடமாடக் கண்டு நொந்தேன்
வெயிலுக்குள் ஒளிகண்டு
வேண்டி நின்றேன்
வெயிலதனில் குருடானேன் வெந்து போனேன்
செயலொன்றில் மட்டேனும்
வெற்றி கண்டு
தெய்வமே அதன்பின்நான் சாக வேண்டும்!
No comments:
Post a Comment