அன்னை ஆடும் அரங்கு
தன்னுளே நிலைத்து நிற்கும்
சத்திய ஜோதி என்னும்
மின்னலை, இறையை, வைய
விடிவினை, ஞானம் என்னும்
கன்னலை, சக்தி தன்னைக்
கருத்துடன் போற்று கின்ற
அன்பர்தம் உள்லம் அன்னை
ஆடிடும் அரங்கம் ஆகும்!
No comments:
Post a Comment