Tuesday, May 14, 2019

யார்?


யார்?

சின்னஞ் சிறிய எறும்புக்குக் கால்களைச்
செப்பமாய்ச் செய்து கொடுத்தவர் யார்?
சன்ன முடியினும் சன்னமாய்க் கால்களில்
சாரும் மூட் டுக்கள் படைத்ததுயார்

பின்னிடும் சின்னக் குருவிக்கவ் வித்தையைப்
பீடுறக் கற்றுக் கொடுத்தது யார்
மின்னலில் கண்ணைப் பறிக்கும் ஒளியதன்
வீச்சைத் தெளிவுற நெய்தது யார்?

அந்த இறையை வணங்குகிறேன்  - அவர்க்கு
யாதும் எளிதாகும் என்பதனால்
எந்த வரமெனக் கேட்காமலே-எனக்கு
ஏற்ற தருளிட வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment