Tuesday, May 14, 2019

நீலகண்டன்


நீலகண்டன்
நீனிற மாலும் தேவி
     நிமலையும் பாகம் கொண்டு
நீனிறம் ஓர்பால் தந்த
     நெறியினால் மேனி முற்றும்
நீனிறம் ஆனால் ஐயம்
     நேரலாம் என்றே நஞ்சை
மேனியில் சேரா  வண்ணம்
     மிடற்றிலே நிறுத்தினாளோ?
இலந்தை
25-10-2011

No comments:

Post a Comment