Sunday, May 12, 2019

வாராகி வண்ணம்


வாராகி வண்ணம்

தானான தத்ததன தானான தத்ததன தானான தத்ததன  தனதானா

ஓராது விட்ட துவு மோதாது  விட் ட துவு  மோயாது  சொற்ற துவு மறியாதே
    ஓராயி ரத்தடவை ஓடோடி யத்தனையு மூதாரி பட்டழிய உழன்றேனே
நாராக மட்டுமெனை நாடோறு மிட்டவர்கள் நாணாது விட்டுவிட   நலிவாலே
    நாயேனு மிற்றுவிழ  நாடாதி ருப்பதுமென் வானார ருட்டிறமு மருள்வாயே!
வேராயு தித்தருளி வீறாய தட்டிவரு பூணாயு லக்கைகொடு பொருவோயே
    வேதாக மத்தலைவி மாதா ப டைத்தலைவி வேறாமு கத்தலைவி புகழ்மாதா
வாராகி புத்தழகி, போராளி, சித்திதரும் ஆதார வித்தைகளி லொளிர்தாயே
     வாராத வித்தைகளை வாகாய ளித்துவிடு மாறாத பொற்புடைய வளமாதே!

No comments:

Post a Comment