Saturday, May 11, 2019

பக்தியினாலே


க்தியினாலே......

அழுது பெறுவது பக்தி-என்றும்
ஆனந்தத் துச்சியே பக்தி
தொழுது கிடப்பது பக்தி-மனத்
தூய்மை நிலையது பக்தி

உள்ளத்தில் உள்ளது பக்தி-என்றும்
                உண்மை தரிசனம் பக்தி
கள்ளமில் லாதது பக்தி-அந்தக்
                கடவுளைச் சார்ந்தது பக்தி
கொண்டு கொடுப்பது பக்தி-திடக்
                கொள்கை உடையது பக்தி
தொண்டில் நிலைப்பது பக்தி-இறைத்
                தோத்திரம் செய்வது பக்தி

விட்டு விடுவது பக்தி- பதம்
                விட்டு விடாதது பக்தி
தொட்டதில் ஊன்றிடும் பக்தி- உறும்
                சோதனைக் கஞ்சாது பக்தி

அன்பில் திளைப்பது பக்தி- என்றும்
                தார மானது பக்தி
துன்பப் படாதது பக்தி -உள்ளம்
                தோய்ந்து கிடப்பது பக்தி

பக்தியி னாலென்ன கிட்டும்- இந்தப்
                பகவானே சொத்தாகக் கிட்டும்
சக்தியும் சித்துமே கிட்டும் - என்றும்
                சாந்த நிலைமையே கிட்டும்

இந்த நிலை எய்தி விட்டால்- பின்
                எந்த நிலைவேண்டும் சொல்வீர்
சிந்தனை செய்வீர் உலகீர்- இந்தத்
தெய்வத்தைச் சொத்தாய்ப் பெறுவீர்!
               

No comments:

Post a Comment