ஏற்பாய் தாயே
மாதா , மகாராணி, மணித்வீப மாநகரில்
வாழும்
தேவி
தீதாக வந்த திறலரக்கன் பலமிழந்து
தேம்பி
ஓட
மோதாமல் மோதி முறிந்து விழச் செய்தவளே
மொய்ம்புத்
தேவி
ஏதானு
மாகாமல் எனையுன்றன் அடியனென
ஏற்பாய்
தாயே!
திகழ்வாக்குத் தேவதைகள் உன்னாணை சிரமேற்று
செய்தளித்த
புகழ்வாக்கு ஸ்ரீலலிதா சஹஸ்ரநா மம்நின்னைப்
போற்றி
செய்யும்
அகழ்வாக்கு பஞ்சதஸி மந்திரத்தின் ஆழத்தை
அளப்பார்
யாரே!
நிகழ்வாக்கு நினதாக்கு , நிறையாத்ம
ஞானத்தை
நிகழ்த்து
வாயே!
No comments:
Post a Comment