தோன்றியும் தோன்றாதவள்
நீலமணி கண்டனின் பாகமணி கொண்டவள்
நீலக் கடல்
மேனியள்
நித்திய
சுமங்கலி சத்திய சுடற்பொறி
நீங்கா
அருள் மோகினி
ஞாலமணி பச்சையள் நாதமெனில் இச்சையள்
நமசிவாயன்
பத்தினி
நன்றென்று
வந்ததை நின்றென்றும் காப்பவள்
ஞானவுரு
வாகின்றவள்
சூலமணி கின்றவள் ஜோதியென நின்றவள்
சுடரொளியாம்
சுந்தரி
தொன்மையில்
தொண்மையாய் அண்மையில் அண்மையாய்த்
தோன்றியும்
தோன்றாதவள்
ஓலமணி ஓசையில் ஓங்கார வாசியில்
ஒய்யாரம்
ஆகின்றவள்
ஓங்காரி ரீங்காரி ஆங்காரி காளியின்
ஒண்பாதம்
போற்றி போற்றி
No comments:
Post a Comment