அன்னை அருள்
அன்னை அருளெனும் அற்புதத்தில் -இந்த
அண்ட மனைத்தும் இயங்குதடி-அவள்
மின்னும் விழியில் முகவொளியில்-இந்த
மேதினி யாவும் மயங்குதடி
ஊமை இசைப்பதும், கோழைகள் வீரமாய்
உற்சாகமாகக் குதிப்பதுவும்
நாமம் அறியாதான் ஞானியாய் யாவரும்
நாடும் தெளிவை விதிப்பதுவும்
இப்படி ஈதென எப்படியோ - கணம்
எண்ணிப் பிரியக் கணிப்பதுவும்
ஒப்பில்லா தேவி களியாட்டு- செய்யும்
ஒவ்வொன்றும் அன்னை விளையாட்டு
No comments:
Post a Comment