வாதுமில்லை
எழுசீர் விருத்தம்
இராகம் அறியேன்நான், என்றாலும் பாடுவேன்
இசைப்பவள் அவளல்லவோ
பராவும் மனமொன்றே
பாவியேன் கொண்டுளேன்
பாடலும் அவளல்லவோ?
தராமல் இருப்பதும்
தருவதும் அவளெனில்
சங்கடம் ஏதுமில்லை
வராமல் இருப்பதும்
வந்திடும் என்கையில்
மனத்திலோர் வாதுமில்லை.
No comments:
Post a Comment