Monday, May 13, 2019

அம்மையின் தோற்றம்


அம்மையின் தோற்றம்
பாதமோ அதலம், முழங்கால் விதலம்
    
பதமுள இடுப்போ ரஸாதலம் ஆகும்
ஏதமில் பூமி உதரம், இதயம்
    
இன்புவர் லோகமே ஆகும், முகமோ
போதரும் சொர்க்கம், விழிகளிரண்டும்
    
புகழ்பெறும் மதி, கதிர் ஆகும், காற்று
மீதுயர் மூச்சு, திக்குகள் கைகள்
    
விளங்கிடும் அம்மையே போற்றியே போற்றி!

No comments:

Post a Comment