ஓம் நம:
தேவியைப்
போற்றுதல்
அம்மா திரிபுரை
ஆதிப்பரம்பொருள் ஆகுமகிலாண்ட நாயகியே
எம்மால் நினைத்திட எண்ணா உயரத்தில் எங்கள் அருகில் இருப்பவளே

அன்புக்
காமேஸ்வரர் இன்பத் தொடைமீதில் ஆளும் காமேஸ்வரி நாயகியே
புன்னகை பூத்திந்த புவனம் புரந்திடும் பூரணியே அருள் நாரணியே

பண்டனைக்
கொன்றனை,
பாரினைக்
காத்தனை பாதம் பணிகின்றோம் ஓம் நம:
மண்டலம் குண்டலம் ஆக அணிந்திடும் மாதா லலிதையே ஓம் நம:

முக்தி அளித்திடும்
நாயகியே என்றும் முன்னுக்கும் முன்னுக்கும் முன்னவளே
பக்தியுடன் உன்னைப் போற்றிடும் எம்மேல் பார்வை பதித்திடு ஓம் நம:
பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு தேவியே பாடியே இவ்விடம் ஆடுகிறோம்
வல்லாங்கு யாவரும் நன்றாக வாழ்ந்திட வாழ்த்துக மாசக்தி ஓம்நம:

No comments:
Post a Comment