உச்சிஷ்ட கணபதியே போற்றி போற்றி !
துதிக்கையோ நினதுமுதல் தத்து வத்தின்
துலக்கமெனப் போகத்தில் யோகம் காட்டும்
பதிக்கின்ற இவ்வுலகில் உயிர்க ளெல்லாம்
பாலுணர்வின் இயக்கத்தில் பூத்த வென்றே
விதிக்கின்ற புனிதத்தை எடுத்துக் காட்டி
வித்தைக்கு முதலிடத்தை அதற்குள் நாட்டி
உதிக்கின்ற ஞானத்தை ஊட்டு கின்ற
உச்சிஷ்ட கணபதியே போற்றி போற்றி! 1
எப்பொருளும் வீணாக முளைப்ப தில்லை
எவ்வுயிரும் அற்பமென உயிர்ப்ப தில்லை
எப்பொழுதும் எவ்விடத்தும் இயக்க மின்றி
எப்படைப்பும் நிகழ்வதில்லை,
ஒவ்வொன் றுக்கும்
செப்பரிய பொருளுண்டு, தொடர்ச்சி
யுண்டு
தெய்வத்தின் கற்பிதத்தில் அனைத்தும் கூடும்
உட்பொருளை தோற்றத்தால் எடுத்துக் காட்டும்
உச்சிஷ்ட கணபதியே போற்றி போற்றி 2
அற்புதனே, அங்குசமும் பாசம்
தானும்
ஆயுதங்க ளாகவிரு கரங்கள் தாங்க
பொற்புடனே துணையையொரு கரமணைக்கப்
புனிதமது கரமொன்றில் பொலிவு கூட்ட
பற்றுமெழில் துணையுடனே உல்லாசத்தில்
பரிந்திருக்கும் எழில்ஞான போக மூர்த்தி
உற்றதுணை யாய்க்காக்கும் கருணை யோகி
உச்சிஷ்ட கணபதியே போற்றி போற்றி!` 3
இன்னவெலாம் நல்கிடுவாய் என்று சொல்ல
எவராலும் இயலாது, ஞானத் திற்கு
உன்னதமாய் எவையெல்லாம் உண்டோ, வாரி
உபாசகர்க்கு நல்குகிறாய்,
உலக வாழ்வில்
சொன்னயமாய்ப் பேசுகிற திறமை, எந்தச்
சூழலிலும்
அஞ்சாமை, வீரம் என்றே
உன்னடியார் தேவைகளைப் பூர்த்தி செய்யும்
உச்சிஷ்ட
கணபதியே போற்றி போற்றி! 4
இன்பத்தின் உருவகம் நீ என்ப தாலே
இன்பத்தை
எல்லோர்க்கும் நல்குகின்றாய்
துன்பத்தைப் போவென்றே அதட்டி மிக்கத்
தொலைவுக்குத்
துரத்துகிறாய், உன்றன் மேலே
உன்மத்தம் பிடித்தவராய் இயங்கும் பக்தர்
ஒருபோதும்
தேவைகளில் வீழ்வதில்லை
உன்பாதம் பணிபவர்க்கு நீயே தேவை
உச்சிஷ்ட
கணபதியே போற்றி போற்றி! 5
உன்மூல மந்திரத்தை உபதே சத்தால்
உள்வாங்கி,,
ஒருமையுடன் ஆழ்ந்து போற்றித்
தன்நெஞ்சம் ஏற்றிஉரு வேற்றும் பக்தன்
தர்க்கத்தில்
வெல்லுகிறான், எதிர்த்து முண்டி
முன்னிற்கும் எதிரிகளும் வசிய மாவார்
முனியாமல்
காக்கின்ற தெய்வம் நீயே
உன்னன்புக் கீடில்லை, பணிகின்
றேன்நான்
உச்சிஷ்ட
கணபதியே போற்றி போற்றி! 6
எளியவன்நீ, இனியவன்நீ,
நினைக்கும் நெஞ்சில்
இசைபவன்நீ,,
இறையவன்நீ, வாக்கில் ஏறித்
தெளிவுதரும் வித்தகன்நீ, சிங்கா
ரன்நீ
சித்தன்நீ,
அத்தன்நீ, துயர்கள் யாவும்
களைபவன்நீ, கனிபவன்நீ,
கவர்ந்தே ஈர்க்கும்
காந்தன்நீ,
சாந்தன்நீ, அண்டத் துள்ளே
ஒளிர்பவன்நீ, ஓங்கார ரூபன்
நீயே
உச்சிஷ்ட
கணபதியே போற்றி, போற்றி! 7
வெள்ளெருக்கைத் தேர்ந்தெடுத்துச் சின்னக் கட்டை
விரலளவு
உருவாக்கி , தேன்பொ ழிந்தே
உள்ளுருகப் பூசிக்கும் உபாச கர்தம்
உடன்பேசும்
கணபதியே, வலது தோளில்
கொள்ளையெழில் காட்டியமர்ந் திருக்கும் ஐயா
குஞ்சரமே,
உத்தமனே, பக்தர் நெஞ்சில்
உள்ளிருக்கும் பக்திகண்டு நெகிழும் தேவா
உச்சிஷ்ட
கணபதியே போற்றி போற்றி! 8
எழில்நீலா சரஸ்வதியை இடப்பா கத்தே
ஏந்தி
விளையாடுகிற தேவா, சற்றே
விழிபார்த்தால் இனியொருதாய் குடருக்குள்ளே
வீழுகின்ற
நிலையில்லை, விண்ணோ ரெல்லாம்
வழிபார்த்தே உனைவணங்கக் காத்தி ருப்பார்
வாய்க்கும்
உன் பிரசாத மீதம் உண்டால்
ஒழியாத துன்பங்கள் ஒழிந்து போகும்
உச்சிஷ்ட
கணபதியே போற்றி போற்றி 9
படுக்கையிலே தானமர்ந்து ஜபித்த போதும்
பலனள்ளிக் கொடுக்கின்றாய், தீட்டில் கூட
அடுத்துனையே வணங்கிடலாம், கல்வி
கேள்வி
அறிவுநலம், செல்வம், பின் பேற னைத்தும்
எடுத்தெடுத்துக் கொடுப்பதற்கே உன்னைப் போல
எவருள்ளார்?, உடுப்பின்றி வணங்க ஞான
உடுப்பணியக் கொடுக்கின்றாய், ஒப்பில் லாத
உச்சிஷ்ட கணபதியே போற்றி போற்றி! 10
No comments:
Post a Comment