மந்திர மங்கலம்
தத் தும் அலைகடல் தத் தளிப்ப தென்னவே
ச ச்சரவு நீங்கிச் ச ஞ்சலங்கள் தாம்விலகி
வி த்தகங்கள் யாவும் வி லகவே விட்டுவிட்டு,
துர் லபம் ஈதென்றே துர் பலம் கொள்ளாமல்
வ ந்திங்கே காயத்ரி வ ந்தனைகள்
செய்யுங்கள்
ரே கை விதியென்றே ரே கைப் பலன்பார்த்தே
நி ம்மதி இழக்கின்ற நி லையெதற்கு, கைபல்லி
யம் பற்றிப் பல்வகைந யம் பொங்கப் பாடினும் என்?
பர் வதங்களுள் சிறந்த பர் வதங்கள்
ஏறினுமென்?
கோ லங்கொள் வேடமிட்டே கோ யில்கள் ஒவ்வொன்றாய்த்
தே டியே அங்குள்ள தே வதைகள்தாம் வழுத்தி
வஸ்ய வரம்பெற்று வஸ்யப் படுத்தினுமென்?
தீ மையுள மாசுகளே தீ ராமல்
நெஞ்சிருந்தால்
மகி மையுள காயத்ரி மகி ழ்ந்தே வருவாளா?
தி டமாக நெஞ்சுள்ளே தி ரும்பத்
திரும்பவர
யோ கம்போல் பயின்றாலே யோ கந்தான் மிகப்புனித
யோ கிகட்கும் கிட்டா யோ கநிலை தான் கிட்டும்
நக ருமிவ் வாழ்க்கையிலே நக ர்ந்துபுறம் செல்லாது
பிர யோகம் செய்து பிர சாத மாய்க்கொண்டால்
சோ ர்வில்லை, மேவுகிற சோ கங்கள் ஏதுமில்லை
த வறாமல் காயத்ரி த டம் நாவில் பதியட்டும்
யாத் திரையிவ் வாழ்க்கையிலே யாத் த கவிதையென
போற்றி
வணங்கிடுவோம்
போற்றி யே போற்றுகவே!
No comments:
Post a Comment