சிதம்பர இரகசியம்
பொன்னம் பலத்திலே
போயாடும் நடராஜன்
தன்பலத்தைக் காட்டியங்கே
ஆடுகிறார் அம்மானை
தன்பலத்தைக் காட்டியங்கே
ஆடுகிறார் ஆமாகில்
முன்னே சுவர்களுக்குள்
ஆடுவதேன் அம்மானை
என்றும் அதற்குள்
இரகசியம்தான் அம்மானை
ஆடுகிற நடராஜன் அம்பலங்கள்
வீட்டுசுடு
காடுபுக்கு நள்ளிரவில்
ஆடுகிறார் அம்மானை
காடுபுக்கு நள்ளிரவில்
ஆடுவரே தாமாகில்
ஆட வெளியில் இடமிலையோ
அம்மானை
சூடுதற்குச் சாம்பலுக்காய்
சென்றனர்காண் அம்மானை
No comments:
Post a Comment