மதுரை மீனாக்ஷி பஞ்சகம்
நேரிசை வெண்பா
அம்மா மதுரை அரசி, ஒயிலாகச்
செம்மாந் திருக்கின்ற சீமாட்டி – தெம்பாகத்
தேக நலத்தோடே செம்மையாய்
நான் வாழ
ஆகும் நலங்கள் அருள்
அருள்வேண்டி உன்னிடத்தில்
யான்கேட்ட பின்தான்
தரல்வேண்டும் என்றால் சரியோ? - பொருளோடே
எல்லா நலமும் இனியதமிழ்
மீனாக்ஷி,
சொல்லாமல் ஈவாய் துணை
துணைவராம் சொக்கருடன் சொக்கி
இருக்கும்
இணையிலா ஞான எழிலே – பிணிக்கின்ற
நோய்க்குலங்கள் தாக்கியெனை
நோகடிக் காதெனக்கு
வாய்க்கும் நலங்கள் வழங்கு.
வழங்கிச் சிவந்தவளே, மாதரசி, அண்டம்
கழங்கென ஆடும் களிப்பே- முழங்கும்
புகழ்தருவாய், பொன்தருவாய், போதம்
தருவாய்
அகம்நிற்பாய் நீயே அரண்.
அரணாகத் தாயே அமைந்துவிடின்
சேய்க்குத்
திரணாக வேறுண்டோ செப்பு- சரணாக
நம்பியுனை வந்தபின்னே நாடப்
பிறிதுளதோ
அம்மவோ அம்மவம் மா!
No comments:
Post a Comment